
Uses of Sesame Oil
இந்தியர்கள் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக மரச்செக்கு எள் எண்ணெயைப் பயன்படுத்தினர். முன்னோர்கள் எள் எண்ணெயை “எண்ணெய்களின் ராணி” என்று அழைத்தனர். எள் எண்ணெயில் நம் நல்வாழ்வுக்கு தேவையான நிறைய நன்மைகள் உள்ளன. அதனால் தான் நம் முன்னோர்கள் இதனை “எண்ணெய்களின் ராணி” என்று அழைத்தனர். அவர்கள் வாகை மரத்தால் ஆன மரச்செக்கில் ஆட்டி பிரித்தெடுக்கப்பட்ட 100% தூய எண்ணெயைப் பயன்படுத்தினர், எள் உடன் கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் மரச்செக்கில் அறைக்கப்பட்ட எள் எண்ணெயில் அனைத்து ஊட்டச்சத்துகளும் அப்படியே இருக்கும். ஆரோக்கியமாக வாழ மூதாதையரின் பாதையில் செல்ல முயற்சி செய்யலாம்.
இங்கே நான் சில எள் எண்ணெயின் நன்மைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அழற்சி எதிர்ப்பு(Anti-inflammatory): அழற்சி என்பது ஃப்ரீ ரேடிக்கல்களால்(free radicals) ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயாகும். நம்ம பாரம்பரிய “எண்ணெய்களின் ராணி” (மரச்செக்கு நல்லெண்ணெய்) மூலம் நமது உள் உறுப்புகளின் வக்கத்தைக் குறைக்கிறது . இதில் செசமால்(Seamol) மற்றும் செசமோளின்(Sesamolin) என்னும் கரிம வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் எள் எண்ணெயில் ஏராளமான துத்தநாகம் மற்றும் தாமிரம் உள்ளது, இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது, இரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் கீ ல்வாத வலி மற்றும் மூட்டுகளின் வக்கத்தைக் குறைக்கிறது. வெதுவெதுப்பான எள் எண்ணெயை உடலில் வக்கம் உள்ள பகுதியில் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கிறது: மரச்செக்கு நல்லெண்ணெயில் 82% நிறைவுறா( LDL) கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 6 உள்ளது. இந்த கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது மற்றும் எல்டிஎல்(LDL) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின்(triglycerides) அளவைக் குறைக்க உதவுகின்றன, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.
நீரிழிவு கட்டுப்பாடு: மரச்செக்கு நல்லெண்ணெய் நீரிழிவு 2ஆம் வகை நோயின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எள் எண்ணெயை ( மரச்செக்கு நல்லெண்ணெய்) 90 நாட்கள் உணவுடன் எடுத்துக் கொண்டால் அது இரத்த சர்க்கரை அளவையும் HbA1c அளவையும் குறைக்கிறது.
புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு: எள் எண்ணெயில் /மரச்செக்கு நல்லெண்ணெய் உள்ள பைடேட் புற்றுநோய் எதிர் கலவையாகும். எள் எண்ணெய் /மரச்செக்கு நல்லெண்ணெய் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.
இரத்த சோகை(அனிமியா): எள் எண்ணெய்/மரச்செக்கு நல்லெண்ணெயில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. மற்றும் எண்ணெய் தயாரிக்கும் போது சேர்க்கப்படும்.
பனை வெல்லம் (கருப்பட்டி)/வெல்லம் இருமடங்கு இரும்புச்சத்து நிறைந்தது, எனவே நல்லெண்ணெய் இரத்த சோகைக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு: எள் எண்ணெய்/ மரச்செக்கு நல்லெண்ணெயில் உள்ள அமினோ அமிலம் செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது, இது நேர்மறையான உணர்வைத் தூண்டும், நாள்பட்ட மன அழுத்தத்தைத் தவிர்க்கவும் உதவுகிறது.
தோல் பராமரிப்பு: சருமத்திற்கு மரச்செக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது கொலாஜனின் தொகுப்பை மேம்படுத்துகிறது. செசமின் மற்றும் வைட்டமின் ஈ நம் சருமத்தைப் புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் காயங்கள் மற்றும் தீக்காயங்களை குணப்படுத்த உதவுகிறது. நல்லெண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இளமை மற்றும் ஆரோக்கியமான சருமத்தைக் கொடுக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
மேலே குறிப்பிட்ட பயன்கள் மட்டுமின்றி. சில பாட்டி வைத்தியம் வட்டு குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறேன்.

• நல்லெண்ணெய் குளியல் தவறாமல் வாரம் இருமுறை இருக்க வேண்டும். பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் ஆண்கள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைக் கிழமைகளிலும். எண்ணெய் குளியல் செய்ய, உடல் சூடு குறையும், உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும், சருமம் பொலிவோடும் இருக்கும். பெண்கள் குறிப்பாக மாதவிடாய் காலத்தில் மரச்செக்கு நல்லெண்ணெய் 5மி குடித்து வந்தால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும், இரத்த ஓட்டம் சீராகும் மற்றும் கர்பப்பை வலுவடையும்.
• மரச்செக்கு நல்லெண்ணெயை 5மி காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி கொப்பளித்து வர, குடல் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். மற்றும் அனைத்து நரம்புகளின் இரத்த ஒட்டம் சீராக இருக்கும். நீண்டகால இளமையான சருமத்துடன் வாழ விரும்புவோர் சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணையால் வாய் கொப்பளியுங்கள். இந்தக் காலகட்டத்தில் கலப்படம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவதால் நாம் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திப்போம். தூய்மையான செக்காடி மரச்செக்கு நல்லெண்ணெயான “எண்ணெய்களின் ராணியை” பயன்படுத்துவோம். ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுவோம்.